பிரபல நடிகை சீதா தாயார் காலமானார்..! இரங்கல் தெரிவிக்கும் ரசிகர்கள்..!
Jan 4, 2025, 08:35 IST

நடிகை சீதா கணவர் பார்த்திபனை விவாகரத்து செய்த பின்னர் சீரியல் நடிகர் சதீஷை இரண்டாவதாக திருமணம் செய்து அவரிடம் இருந்தும் பிரிந்ததாக கூறப்படுகிறது. தற்போது விருகம்பாக்கத்தில் உள்ள புஷ்பா காலனி பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் தாயார் காலமானதை சோகத்துடன் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் " இன்று எங்களது பாசமிகு தாயார் சந்திரா மோகன் காலமானார் என்று பதிவிட்டுள்ளார். அத்தோடு அவரின் புகைப்படத்தினையும் ஷேர் செய்துள்ளார். இவருக்கு பலரும் இரங்கல் தெரிவிப்பதுடன் ஆறுதல் கூறி வருகிறார்கள்.