விடுதலை டீமுக்கு வெற்றிமாறன் செய்த கைமாறு; இளையாராஜாவுக்கு கொஞ்சம் ஸ்பெஷல்..!!
விடுதலை படத்தில் தன்னுடன் பணியாற்றிய அனைத்து குழுவினருக்கும் இயக்குநர் வெற்றிமாறன் ஒரு தங்க நாணயத்தை பரிசாக அளித்துள்ளார்.
Apr 2, 2023, 11:05 IST
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விடுதலை’ படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடைப் போட்டு வருகிறது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் இந்த படத்துக்கு பாராட்டுக்களை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தன்னுடைய நீண்ட நாட்களாக பணியாற்றிய 25 துணை இயக்குநர்களுக்கு, செங்கல்பட்டு அடுத்துவுள்ள உத்திரமேரூர் பகுதியில் ஆளுக்கொரு கிரவுண்ட் நிலம் வாங்கி பரிசளித்துள்ளார். இப்போது விடுதலை படத்தில் தன்னுடன் பணியாற்றிய படக்குழு ஒவ்வொருவருக்கும் தங்க நாணயம் வாங்கி தந்துள்ளார்.
விடுதலை படத்தின் முதல் நாள் வசூல் ரூ 8 கோடி என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு சிறப்பான இசை பங்களிப்பைச் செய்த இளையராஜாவுக்கு நேரில் சென்று வெற்றிமாறன் நன்றி கூறியுள்ளார். அவருடன் தயாரிப்பாளர் எல்ரெட் குமாரும் உடனிருந்தார்.