வெற்றிமாறன், சூரி, விஜய் சேதுபதி- விடுதலை பட ஷூட்டிங் படங்கள்..!

 
விடுதலை பட ஷூட்டிங் படங்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்து வரும் ‘விடுதலை’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தனுஷ், மஞ்சு வாரியார் நடிப்பில் வெளியான அசுரன் படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கி வரும் படம் ‘ அசுரன்’. இடையில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்திற்காக ‘ஓர் இரவு’ என்கிற கதையை குறும்படமாக இயக்கி இருந்தார்.

விடுதலை படத்தில் சூரி கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். எல்ராட் குமார் தயாரித்துள்ளார். 

கோயம்புத்தூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட இடங்களில் இந்த படத்துக்கான படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று முடிந்தன. முன்னதாகவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படத்தின் தலைப்பையும் வெளியிட்டது படக்குழு.

தற்போது விடுதலை படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் சில இணையதளங்களில் வெளியாகி கவனமீர்த்துள்ளன. இந்த படத்தில்  பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From Around the web