வேட்டையன் OTT வெளியிட்டு தேதி அறிவிப்பு..!
Nov 1, 2024, 06:05 IST
ஜெய் பீம் பட புகழ் ஞானவேல் இயக்கத்தில் போலீஸ் கதைக்களத்தினை மையமாக கொண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் உருவான படம் தான் வேட்டையன். இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகி இருந்தது.
ஏறத்தாள 160 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் 200 கோடி ரூபாய்க்கும் மேலான வசூல் சாதனை பெற்று வருகிறது.இப் படத்தை திரையரங்கில் கண்ட சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் இத்திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு எப்போது என கேட்டுக்கொண்டே இருந்தனர்.
இப்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.திரையரங்குகளில் மாஸாக வெளியாகி கலக்கி வரும் ரஜினியின் வேட்டையன் படம் வரும் நவம்பர் மாதம் 8ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக உள்ளது.