வைரலாகும் வீடியோ..! பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அருணுக்கு அர்ச்சனா கொடுத்த வரவேற்பு..! 

 
1
பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம்  இறுதியாக நடைபெற்ற டபிள் எவிக்சனில் தீபக் மற்றும் அருண் ஆகியோர் எதிர்பாராத விதமாக எலிமினேட் ஆகி வெளியே சென்றனர். இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இருவருமே பைனல் லிஸ்ட்குள் நுழைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது.

இதில் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் அருண். பிக் பாஸ் வீட்டிற்குள் இவர் அமைதியான ஒருவராகவே காணப்பட்டார். இவர் நடிப்பதாக பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. ஆனாலும் இறுதிவரை எந்த சண்டை சச்சரவும் இல்லாமல் இவரது கேம் பிலே காணப்பட்டது.

அருண் சீரியல் நடிகையும் பிக்பாஸ் டைட்டில் வின்னருமான அர்ச்சனாவை காதலிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. ஆனால் இருவரும் மௌனம் காத்து வந்த நிலையில், இறுதியாக பிக்பாஸில் நடந்த பிரீ டாஸ்க்கில் தமது காதலை உலகறிய செய்திருந்தார்கள்.

இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட்டான  அருண், நேரடியாக அர்ச்சனாவை சந்தித்துள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டா  பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.


 


 

From Around the web