நடிகை ஜோதிகா தலைகீழாக நின்றபடி ஒர்க்அவுட் செய்யும் வீடியோ..!!
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘வாலி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜோதிகா. அதனைத் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, முகவரி, குஷி, தொனலி, 12 பி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இவரின் துருதுரு நடிப்பிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. கோலிவுட்டில் டாப் ஹீரோயினாக இருந்தபோதே நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பின் தியா, தேவ் என இரண்டு குழந்தைகள் பிறந்ததால் சில ஆண்டுகள் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
குழந்தைகள் வளர்ந்த பின்னர் மீண்டும் சினிமாவில் தன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஜோதிகா, தொடர்ந்து கதாநாயகி சார்ந்த படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி நடிகர் சூர்யாவுடன் இணைந்து 2டி என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி அதன் மூலம் தரமான படங்களை தயாரித்தும் வருகிறார்.
ஜோதிகா தற்போது காதல் என்ற படத்தில் தயாராகி வருகிறார். இப்படத்தில் மலையாள நடிகர் மம்முட்டிக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதுதவிர இந்தியிலும் ஜோதிகா இப்படத்தில் நடிப்பதாக உறுதியளித்துள்ளார். பிள்ளைகள் மும்பையில் படிப்பதால் சூர்யாவும் ஜோதிகாவும் மும்பையில் வீடு வாங்கி செட்டிலாகிவிட்டனர்.
சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிடும் ஜோதிகா, நேற்று உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை ஜோதிகா தலைகீழாக நின்று பயிற்சி பெறுவதை பார்த்து பல்வேறு இளம் நடிகைகள் ஆச்சர்யப்பட்டு வாவ் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர். 44 வயதிலும் ஜோதிகா இப்படி உடற்பயிற்சி செய்வதை பலரும் பாராட்டுகிறார்கள்.