நடிகை மிருணாள் தாகூருக்கு அடி விழும் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரல்..! 

 
1

 ஜிம்மில் மிருணாள் தாகூரை அவரது ஜிம் டிரெய்னர் அடித்த வீடியோவை சீதா ராமம் நடிகை வெளியிட்டுள்ளார்.

துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், கவுதம் மேனன் நடிப்பில் வெளியான சீதாராமம் படத்தில் சீதாவாகவும் நூர்ஜஹானாகவும் நடித்து ரசிகர்களை ஏங்க வைத்தவர் நடிகை மிருணாள் தாகூர்.
விட்டி தண்டு, சுராஜ்யா உள்ளிட்ட மராத்தி படங்களில் நடித்து வந்த மராத்தி நடிகையான மிருணாள் தாகூர் பாலிவுட்டில் வெளியான லவ் சோனியா படத்தில் நடித்து பிரபலமானார். டோலிவுட்டில் துல்கர் சல்மான் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியான சீதா ராமம் படத்தில் சிறப்பாக நடித்து இளைஞர்கள் மனங்களில் இடம்பிடித்துள்ளார்.

சீதா ராமம் படத்திற்கு பிறகு நானியுடன் இணைந்து மிருணாள் தாகூர் நடித்த ஹாய் நானா திரைப்படமும் அவருக்கு வெற்றிப் படமாக மாறியது. தொடர்ந்து ஹிட் கொடுத்து வந்தால் எப்படி என மிருணாள் தாகூரை தனது படத்தில் புக் செய்து விஜய் தேவரகொண்டா ஃபேமிலி ஸ்டார் மூலம் தெலுங்கில் மிருணாள் தாகூருக்கு மறக்க முடியாத ஃபிளாப் படத்தை இந்த ஆண்டு கொடுத்தார். அதன் பின்னர் மிருணாள் தாகூருக்கு கணிசமாக பட வாய்ப்புகள் குறைந்து விட்டன.

கங்குவா படத்தில் பீரியட் போர்ஷனில் மிருணாள் தாகூர் நடித்திருப்பதாக கிசுகிசுக்கள் வெளியானது. ஆனால், அந்த படம் குறித்த எந்தவொரு தகவலும் அதன் பின்னர் வெளியாகவில்லை. இந்நிலையில், கல்கி படத்தில் மிருணாள் தாகூர் கேமியோவாக வர வாய்ப்புகள் அதிகம் என கூறுகின்றனர். துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா உள்ளிட்டோரும் பிரபாஸின் கல்கி படத்தில் கேமியோவாக வர உள்ளார்களாம்.

ஜிம்முக்கு நடிகைகள் போனாலும் கூடவே போட்டோகிராஃபரை அழைத்துச் சென்று அங்கேயும் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகின்றனர். ஜிம்முக்குப் போன மிருணாள் தாகூர் வொர்க்கவுட் செய்யாமல் ஜிம் மாஸ்டருக்கு ஹார்ட்டீன் வைக்க முயன்ற நிலையில், அவரது கையில் அடித்து டம்பள்ஸை கையில் கொடுத்து வொர்க்கவுட் செய்யும் ஃபன்னி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சீதா ராமம் படத்திற்கு பிறகு மிருணாள் தாகூர் மீது ஏகப்பட்ட ரசிகர்கள் வெறித்தனமான அன்பை கொட்டி வருகின்றனர். யாருடா எங்க சீதா ராமம் செல்லத்தை அடித்தது என கமெண்ட் பக்கத்தில் திட்டித் தீர்த்து வருகின்றனர். உஷாராக அந்த ஜிம் டிரெய்னர் முகத்தை காட்டவில்லை. இல்லையென்றால் அவருக்கு எந்த இடத்தில் அடி விழுமோ என கமெண்ட்டுகள் குவிகின்றன.

From Around the web