தீயாய் பரவும் வீடியோ..! படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய நடிகர் விஜய் தேவரகொண்டா..! 

 
1

கௌதம் தின்னத்துறை இயக்கத்தில் தனது பன்னிரண்டாவது படத்தில் நடித்து வருகிறார் விஜய் தேவரகொண்டா. 

விஜய் தேவரகொண்டா சமந்தாவுடன் இறுதியாக நடித்த குஷி திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.அவரது முந்தைய படங்களும் தோல்வி என்பதால் மீண்டும் கம்பேக் கொடுக்கும் வகையில் முழு முயற்சியுடன் ஈடுபட்டு வருகின்றார் விஜய் தேவரகொண்டா. அடுத்த வருடம் மார்ச் 28ஆம் தேதி இந்த படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில்  இந்த படத்திற்கான ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா மாடியில் இருந்து நடந்து வரும்போது தவறி விழுந்த காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதன்போது அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதோ அந்த வீடியோ..


 


 

From Around the web