வைரலாகும் தற்கொலை குறித்து விஜய் ஆண்டனி பேசிய வீடியோ..! 

 
1

விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். 12ம் வகுப்பு படித்து வந்த மீரா கடந்த ஒரு வருடமாக மன அழுத்தத்திற்காக சிகிச்சை எடுத்து வந்ததாகவும், மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துக் கொண்டார்.

இந்நிலையில், தற்கொலை குறித்து விஜய் ஆண்டனி பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றன.

அந்த வீடியோவில், “எனக்கு 7 வயதாக இருக்கும்போது என் அப்பா தற்கொலை செய்து கொண்டார். கைக்குழந்தைகளை வைத்துக் கொண்டு என் தாய் பட்ட கஷ்டங்களால் அந்த வலி என்னவென்று எனக்கு நன்றாக தெரியும். நிறைய குழந்தைகளும் தற்கொலை எண்ணத்துடன் இருக்கிறார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மேல் அழுத்தம் கொடுக்கக் கூடாது. மற்றவர்கள் உங்கள் மீது அன்பு செலுத்த வேண்டும் என எதிர்பார்க்காமல் நீங்கள் உங்களை நேசியுங்கள்” என்றார்.

From Around the web