சன்னி லியோன் பகிர்ந்த வீடியோ பதிவு சமூகவலைதளத்தில் வைரல்..!!
Dec 23, 2021, 07:05 IST

நடிகை சன்னி லியோன் கொரோனா தடுப்பூசி குறித்து பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சர்ச்சை நடிகையான சன்னி லியோன் தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். வீரமாதேவி என்ற சரித்திர கதையம்சம் உள்ள படத்தில் நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு, கன்னட, மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழில் இயக்குநர் வடிவுடையான் இயக்கத்தில் ‘வீரமாதேவி’ எனும் படத்தில் நடிப்பதற்காக சன்னிலியோன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் இயக்குநர் யுவன் இயக்கத்தில் ‘ஓ மை கோஸ்ட்’ படத்திலும் சசிகுமார் இயக்கத்தில் மற்றொரு படத்திலும் சன்னி லியோன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.