சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வீடியோ.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!
‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. இந்தப் படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். இந்தப் படத்தில், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். முத்துவேல் பாண்டியன் என்ற வேடத்தில் ரஜினி நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இந்தப் படம், வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஜெயிலர் படத்தின் முதல் பாடல் கடந்த 6-ம் தேதி வெளியானது. அனிருத் இசையில் அருண் ராஜா காமராஜ் எழுதியுள்ள காவாலா என்ற பாடல் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியது. அதேபோல் கடந்த 17-ம் தேதி ஹுக்கும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. பான் இந்திய படமாக உருவாகிவரும் இந்தப் படத்தின் புரமோஷன் போதுமான அளவில் இல்லை என ரசிகர்கள் குறைபட்டுக்கொண்டனர்.
Get ready…🔥💥🥳@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu @iamvasanthravi @kvijaykartik @Nirmalcuts @KiranDrk @AlwaysJani @StunShiva8 @RIAZtheboss #Jailer pic.twitter.com/uRkjbMsTSI
— Sun Pictures (@sunpictures) July 21, 2023

இந்த நிலையில் சன் டிவி புரமோவுடன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவிருப்பதாக அறிவித்துள்ளது. அதனுடன் இதுவரை நடந்த இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியதை வீடியோவாக வெளியிட்டுள்ளது. இது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.