தெலுங்கில் வெளியாகும் ‘விடுதலை‘ திரைப்படம்…!
Apr 8, 2023, 14:18 IST
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் ‘விடுதலை -1‘. இதில் கதாநாயகியாக பவானி ஸ்ரீ நடித்துள்ளார். இப்படம் வெளியாகி ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று வருகிறது. மேலும் இப்படம் நல்ல வசூலையும் செய்து வருகிறது.
இந்நிலையில் தமிழில் இப்படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து தெலுங்கிலும் வெளியிட இப்படக்குழு முடிவு செய்து உள்ளார்கள். தெலுங்கில் ‘விடுதலா‘ என்ற பெயரில் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இப்படத்தை தெலுங்கில் அல்லு அர்ஜுனின் அப்பா தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் வெளியிடுகிறார்.
 - cini express.jpg)