விடுதலை 2 படத்தில் நடந்த எதிர்பாராத மாற்றம்- ஏமாற்றப்படுவார்களா ரசிகர்கள்..??

இந்தாண்டுக்குள் விடுதலை 2 படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான வாய்ப்பு முற்றிலும் குறைவு என்று படக்குழு தரப்பில் கூறப்படுகிறது. 
 
 
viduthalai 2

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடுதலை 2’. இந்த படத்தில் எஞ்சியிருக்கும் காட்சிகளை படமாக்க 20 நாட்கள் போதும் என்று திட்டமிட்டாராம் வெற்றிமாறன். ஆனால் அதற்கு 50 முதல் 50 நாட்கள் வரை தேவைப்படும் என்பதை பின்னர் படக்குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

இதனால் திட்டமிட்டப்படி விடுதலை 2 படம் இந்தாண்டுக்குள் வெளிவருவது சிக்கல் என்று கூறப்படுகிறது. இதுதவிர, படத்துக்கான இறுதிக்கட்ட பணிகள் முடிவடைய மேலும் நீண்ட நாட்கள் ஆகும் என்று சொல்லப்படுகிறது. இதனால் விடுதலை 2 திரைப்படம் நிச்சயமாக இந்தாண்டுக்குள் வெளியாகாது என்று அடித்துக் கூறுகின்றனர்.

படக்குழுவின் இந்த தகவல், விடுதலை 2 படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. விரைவில் இதுதொடர்பாக வெற்றிமாறன் உள்ளிட்ட படக்குழுவினர் விளக்கம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

From Around the web