இன்று வெளியாகும் விடுதலை 2 படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி..! 

 
1

நடிகர் சூரி, நடிகர் விஜய் சேதுபதி, நடிகை மஞ்சுவாரியர் நடித்த விடுதலை-2 திரைப்படத்தின் மீது ரசிகர்களிடத்தே அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. இதுவரையில் வெற்றிமாறன் கொடுத்த வெற்றி படங்களின் லிஸ்ட்டில் தற்போது விடுதலை பாகம் 1ம் இணைந்து விட்டது. இதனால் பாகம் இரண்டு எப்படி இருக்க போகிறது என ரசிகர்கள் அவளாக காத்திருக்கிறார்கள். 

இந்நிலையில் "விடுதலை-2  திரைப்படத்தின் சிறப்புக்காட்சிக்கு திரையரங்குகளில் நாளை தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.  இன்று ஒருநாள் மட்டும் காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை மொத்தமாக 5 காட்சிகளை திரையிட அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “விடுதலை 2’ படக்குழுவினர் 20-ம் தேதி ஒரு நாள் மட்டும் காலை 9 மணி சிறப்புக் காட்சியை திரையிட அனுமதி கோரியுள்ளனர். அதன்படி, 20-ம் தேதி ஒரு நாள் மட்டும் காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 2 மணி வரை ஒருநாளைக்கு அதிகபட்சமாக 5 காட்சிகளை திரையிட அனுமதி அளிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி நடித்த ‘விடுதலை’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் இன்று (டிச.20) திரையரங்குகளில் வெளியாகிறது. விஜய்சேதுபதி, சூரி, மஞ்சுவாரியர், பவானி ஸ்ரீ, கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், போஸ்வெங்கட், அனுராக் காஷ்யப் உள்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். தமிழகத்தில் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. படம் நாளை வெளியாக உள்ள நிலையில், தமிழக அரசு சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From Around the web