விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரிப்பில் ஜல்லிக்கட்டு ஆவணப்படம் – டீஸர் வெளியானது..! 

 
1

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தற்போது தங்களது தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் மூலம் வரிசையாக பல படங்களை தயாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே இவர்களது தயாரிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது .இதையடுத்து ரவுடி பிக்சர்ஸ் கூழாங்கல் என்ற படத்தை தயாரித்தது அந்த படம் பல சர்வதேச விருதுகளை வென்று தமிழ் சினிமாவுக்கும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் பெயரையும் புகழையும் பெற்று தந்தது.

இதையடுத்து கவின் நடிக்கும் குருவி என்ற படத்தை இந்நிறுவனம் தயாரித்து வருகிறது.ஆனால் இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் இன்னும் வெளி வராமல் இருக்கிறது.

இந்நிலையில் தற்போது தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டின் பாரம்பரியத்தையும், வரலாற்றையும் விளக்கும் விதமாக ஒரு சிறப்பான தரமான ஆவண படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.இது குறித்த டீசர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது . அந்த டீசரும் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

From Around the web