நயன்தாராவை வாழ்த்தி போஸ்ட் போட்ட விக்னேஷ் சிவன்..!

 
1

’ஜவான்’ படத்தில் நாயகியாக நடித்துள்ள நயன்தாராவின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டருக்கு ’உன்னை பார்த்து பெருமைப்படுகிறேன்’ என நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள ’ஜவான்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் நயன்தாரா நாயகி ஆக நடித்துள்ளார்.

இந்த நிலையில் சற்றுமுன் நயன்தாராவின் ‘ஜவான்’ போஸ்டரை ஷாருக்கான் வெளியிட்டு ‘அதில் புயலுக்கு முன் வரும் இடி இவர்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவை பார்த்த விக்னேஷ் சிவன், ‘ஷாருக்கான் ரசிகராக இருந்து அவரது திரைப்படங்களை மட்டுமே பார்க்க வேண்டும் என்று இருந்த நயன்தாரா, தற்போது அவருக்கு ஜோடியாகவே ஒரு பெரிய படத்தில் நடித்துள்ளார்.


 

உங்கள் பயணம் இப்போதுதான் தொடங்குகிறது. உங்களை பார்க்க எனக்கு பெருமையாக இருக்கிறது. நீங்கள் மிகவும் ஊக்கம் அளிக்கிறீர்கள்’ என்று பதிவு செய்துள்ளார். விக்னேஷ் சிவனின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

From Around the web