அஜித்துக்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்- விக்னேஷ் சிவன் கேமிங் பிளான்..!!

லைக்கா புரொடக்‌ஷன்ஸுக்காக அஜித் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பை இழந்தார் விக்னேஷ் சிவன். அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் படம் உருவாக்க திட்டம்.
 
vignesh shivan

அஜித் நடிக்கும் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை கோட்டை விட்ட இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் கைக்கொடுத்துள்ளார்.

கடந்தாண்டு லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் நடிக்கும் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை விக்னேஷ் சிவனுக்கு வழங்கப்பட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டது.

ajith kumar

இதற்கிடையில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம், குழந்தை பிறப்பு என்று தனிப்பட்ட வாழ்க்கையில் பிஸியாக இருந்துவிட்டார். இதனால் அஜித் படத்தின் மீது கவனம் செலுத்தாமல் போய்விட்டது. மேலும் அஜித் உலக சுற்றுலா போவதற்கு முன்பு, படத்தை முடிக்க திட்டமிட்டிருந்தார்.

அதற்கேற்றவாறு விக்னேஷ் சிவன் தயாராக இல்லை என்று தெரியவந்த போது, அவர் படத்தில் இருந்து தூக்கப்பட்டார். தற்போது அஜித் படத்தை லைக்கா புரொடக்‌ஷன்ஸுக்காக மகிழ் திருமேணி இயக்கவுள்ளார். அஜித் குடும்பத்துடன் உலக சுற்றுலா சென்றுள்ளதால், அவர் திரும்பி வந்தவுடன் இப்படம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.

pradeep

இதனால் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் விக்னேஷ் சிவனுக்கு, நடிகர் பிரதீப் ரங்கநாதன் கைக்கொடுத்து உதவ முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளார். விரைவில் இதுதொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

From Around the web