நயன்தாரா குழந்தைகளின் படத்தை வெளியிடுவதற்கு காரணம் இதுதான்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த 2022-ம் திருமணம் செய்துகொண்டார். அந்தாண்டே அக்டோபர் 10-ம் தேதி இரண்டு ஆண் இரட்டை குழந்தைகளுக்கு இருவரும் பெற்றோர்களாகினர். ஆனால், வாடகை தாய் மூலம் குழந்தைகள் பெற்றதற்கு இருவரும் கடுமையான எதிர்ப்புக்கு ஆளாகினர்.
அதுதொடர்பாக எழுந்த பிரச்னைகளை சட்டரீதியாக பதிலளித்து முடித்துவைத்தனர். இதையடுத்து இருவரும் தங்களுடைய தொழில்முறை வாழ்க்கையில் பிஸியாக உள்ளனர். இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணமாகி ஓராண்டு நிறைவுபெற்றுள்ளது.
Nice pics of #LadySuperstar #Nayanthara with her twin babies 👌 pic.twitter.com/SBjoSBJ0k3
— Rajasekar (@sekartweets) June 9, 2023
இதை சிறப்பு செய்யும் விதமாக நயன்தாரா தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இரண்டு குழந்தைகளின் முகத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், இருவருக்கும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.