பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்கும் விக்னேஷ் சிவன்..? 

 
1

இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித் குமாரின் 62-வது படத்தை இயக்க இருப்பதாக லைகா புரொடக்ஷன்ஸ் அறிவித்திருந்தனர். ஆனால் அஜித்திற்கு விக்னேஷ் சிவனின் கதை பிடிக்கவில்லை என்றும் அதனால் அவர் மறுத்துவிட்டார் என்றும் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் அஜித்தின் 62-வது படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி தான் இயக்கப்போவதாக தகவல் வெளியானது.

இதனை உறுதி செய்யும் வகையில் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பயோவில் இருந்த அஜித் 62 படத்தின் தலைப்பை நீக்கினார். தற்போது அந்த மனஉளைச்சலில் இருந்து வெளிவந்து தன் அடுத்த படத்தின் பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளார் விக்னேஷ் சிவன்.

இந்நிலையில் தனது அடுத்த படத்தில் ‘லவ் டுடே‘ படத்தில் ஹீரோ மற்றும் இயக்குனராக கலக்கிய பிரதீப் ரங்கநாதனை அணுகியுள்ளார். அவரை தொடர்ந்து அந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியிடம் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றார். இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

From Around the web