காதல் கதையை படமாக்கும் விக்னேஷ் சிவன் – ஓகே சொன்ன பிரபல நடிகர்..!!
Sat, 18 Mar 2023

இயக்குனர் விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால் இவரின் கதை அஜித்குமாருக்கு பிடிக்கதாதல் அந்த படத்திற்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார். மேலும் ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பு இயக்குனர் மகிழ்திருமேனிக்கு கிடைத்தது. அஜித் குமாரை வைத்து இயக்கும் வாய்ப்பு கைவிட்டு போனதால் மன உளைச்சல் அடைந்தார் விக்னேஷ் சிவன். தற்போது இந்த சோகத்தில் இருந்து மீண்டுள்ள விக்னேஷ் சிவன், மனம் தளராமல் ‘லவ்டுடே‘ புகழ் பிரதீப் ரங்கநாதனிடம் கதை சொல்லியிருக்கிறார்.
விக்னேஷ் சிவனின் கதை பிடித்துப்போக உடனடியாக படத்தை தொடங்கலாம் என பிரதீப் சொல்லிவிட்டாராம். ‘காத்துவாக்குல ரெண்டு காதல் போல‘ இதுவும் வித்தியாசமான காதல் கதையாம். இதை வெற்றிப் படமாக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் என கூறப்படுகிறது.