அட்லி படத்தில் இணையும் விஜய் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர்..?

 
அட்லி படத்தில் இணையும் விஜய் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர்..?

தளபதி 65 படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தில் அவருடன் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரை நடிக்கவைக்க படக்குழு முயற்சித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரபல தெலுங்கு ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் நடிகர் விஜய் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்தை அட்லி இயக்குவதாக கூறப்பட்டுள்ளன.

இந்த குறிப்பிட்ட படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூண்று மொழிகளில் தயாராகவுள்ளது. அதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளது. ஏற்கனவே அட்லியுடன் தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களில் விஜய் நடித்துவிட்டதால், இந்த படத்தில் அவர் நடிப்பது உறுதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் தற்போது ஜார்ஜியாவில் நடைபெற்று வரும் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். பிரமாண்டமான பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

அதேபோல ஜூனியர் என்.டி.ஆர் ராஜமவுலி இயக்கத்தில் தயாராகி வரும் ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் நடித்து வருகிறார். ராம் சரண் மற்றொரு கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் கதாநாயகியாக நடிக்கிறார். விரைவில் இந்த படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

From Around the web