24 வருடங்கள் கழித்து இணையும் விஜய் - சிம்ரன் ஜோடி!

 
1

  2023 பிப்ரவரியில்‘தமிழக வெற்றிக்கழகம்’ அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், அடுத்த ஆண்டிற்குள் தன் கைவசம் இருக்கும் படங்களை முடிக்க திட்டமிட்டுள்ளார்.  முழுநேர அரசியலில் கால்பதிக்க இருக்கும் நிலையில்  இது குறித்த அறிவிப்பினை வெளியிடும் போது  திரையுலக பயணத்திற்கும் முழுக்கு போட்டு விட்டு, முழு நேரமாக அரசியலில் இறங்குவதாக தெரிவித்து விட்டார். இந்நிலையில் தற்போது ”தளபதி 69” படத்தில் நடிக்க இருக்கிறார். 

விஜய் சிம்ரன்


விஜய்யின் கடைசி படம் என்பதாலோ என்னவோ, தளபதி 69 படத்தின் மீது பலருக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகிறது. 20 வருடங்களுக்கு முன்னர் தன்னுடன் பல படங்களில் நடித்த சிம்ரனுடன் சேர்ந்து தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது சிம்ரனுக்கு வயது 48. இருவரும்  துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, ஒன்ஸ் மோர், உதயா உட்பட பல  படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். 
நடிகர் விஜய், கடைசியாக வெளியான தனது சில படங்களில், பல வருடங்களுக்கு முன்னர் தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகைகளுடன் சேர்ந்து நடித்து வருகிறார்.

விஜய் மக்கள் இயக்கம்

கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி  படங்களில் த்ரிஷாவுடன் சேர்ந்து நடித்த விஜய், கடந்த ஆண்டு அவருக்கு ஜோடியாக லியோ படத்தில் நடித்திருந்தார். தி கோட் படத்திலும் ‘வசீகரா’ படத்திற்கு பிறகு, சினேகாவுடன் ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  அந்த வரிசையில் தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கத்தி, தெறி, மெர்சல்  படங்களில் ஜோடி சேர்ந்தவர்கள். இதற்கான டெஸ்ட் ஷூட்டிங் நடந்து முடிந்து விட்டதாகவும், இதில் சமந்தா நடிப்பது கிட்டத்தட்ட ஓகே ஆகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
சமந்தாவுடன் ‘பிரேமலு’ படம் மூலம் பிரபலமான மமிதா பைஜூதான்.  இவர் ஏற்கனவே ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘ரெபெல்’ திரைப்படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

From Around the web