பத்திரிக்கையாளர் சந்திப்பில் இளைய மகளுடன் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி..!

 
1

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்தம்’.இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ‘ரத்தம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் ஆண்டனி தனது இளைய மகள் லாராவுடன் கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு முதல் முறையாக விஜய் ஆண்டனி திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

vijay-antony-attended-ratham-movie

From Around the web