இதுதான் விஜய் ஆண்டனியின் மகளா..??

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மனைவி ஃபாத்திமா, தனது ட்விட்டர் பக்கத்தில் மகள் மீராவின் புகைப்படத்தை பதிவிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளார். 
 
விஜய் ஆண்டனி

நடிகர் விஜய் ஆண்டனி மகளின் புகைப்படத்தை அவருடைய மனைவி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளதை அடுத்து, நெட்டிசன்கள் பலரும் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான சுக்ரன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இவர் உருவாகி வரும் சூழலில் ‘நான்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதை தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், போன்ற படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக உள்ளார்.

மனைவி மகளுடன் விஜய் ஆண்டனி

இவர் தற்போது நடித்து வரும் ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் மிகப்பெரியளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பின் போது பெரும் விபத்தில் விஜய் ஆண்டனி சிக்கிக்கொண்டார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், தொடர் சிகிச்சைகள் மூலம் உடல்நலம் தேறி வருகிறார். விரைவில் ‘பிச்சைக்காரன் 2’ படப்பிடிப்பில் கலந்துகொள்வேன் என்று அவர் அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில் விஜய் ஆண்டனியின் மனைவியும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஃபாத்திமா, தனது மகள் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் நடந்த பள்ளி அளவிலான போட்டியில் மகள் வெற்றி பெற்றுள்ளார். அதொடர்பாக பெருமிதம் தெரிவித்துள்ள அவர் மகள் மீரா விஜய் ஆண்டனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


அதையடுத்து இந்த ட்வீட் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதான் விஜய் ஆண்டனியின் மகளா? என்று பதிவிட்டு பலரும் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, ஃபாத்திமாவின் இந்த போஸ்ட் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
 

From Around the web