விபத்துக்கு பிறகு ஆளே அடையாளம் தெரியாமல் போன விஜய் ஆண்டனி..!!

பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த விஜய் ஆண்டனி, முதல்முறையாக வெளியே வந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 
 
 
vijay antony

விஜய் ஆண்டனி நடித்து இயக்கியுள்ள படம் பிச்சைக்காரன் 2. இதனுடைய படப்பிடிப்பு மலேஷியாவின் லங்காவி தீவுக் கடலில் நடைபெற்று வந்தது. எப்போது ஏற்பட்ட பெரும் விபத்தில், நடிகர் விஜய் ஆண்டனிக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர் பல நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுக்க நேர்ந்தது.

கை, கால், முகம் உள்ளிட்ட பகுதிகளில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. தற்போது அவர் பூரண உடல்நலன் பெற்று மீண்டும் சினிமாவில் நடிக்கத் துவங்கியுள்ளார். விஜய் ஆண்டனி நடித்து இயக்கியுள்ள ‘பிச்சைக்கார்ன 2’ படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

அதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக அவர் வந்தபோது ஆளே முற்றிலும் மாறி இருந்தார். மூக்கு மற்றும் தாடையில் அறுவை சிகிச்சை மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததால் அவரது முகமே மாறி இருந்தது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

From Around the web