விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்..!!

விஜய் ஆண்டனி இயக்கி ஹீரோவாக நடித்து வரும் பிச்சைக்காரன் 2 படத்தின் டிரெய்லர் மற்றும் வெளியீடு தொடர்பான தகவல்களை படக்குழு அறிவித்துள்ளது.
 
vijay antony

கடந்த 2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் தமிழில் மாபெரும் வரவேற்பை பதிவு செய்தது. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இந்த படம் மெகா ஹிட்டானது. இந்த படம் விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இதையடுத்து பிச்சைக்காரன் 2 படத்திற்கான பணிகளில் கடந்தாண்டு களமிறங்கினார் விஜய் ஆண்டனி. அப்படத்தில் ஹீரோவாக நடிப்பதோடு, அந்த படத்தை தானே இயக்குவதாகவும் அறிவித்தார். தற்போது இந்த படத்தின் பணிகள் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகவுள்ளது.

முன்னதாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 14-ம் தேதி என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களுக்காக ரிலீஸ் முடிவு பின்வாங்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் பிச்சைக்காரன் 2 படம் தொடர்பான முக்கிய அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

அதன்படி, இந்த படத்தின் டிரெய்லர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் மே 19-ம் தேதி பிச்சைக்காரன் 2 படத்தின் வெளியீடு இருக்கும் எனவும் படக்குழு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இது படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு, மேலும் எதிர்பார்ப்பை எகிறச்செய்துள்ளது. 
 

From Around the web