ரஞ்சித்துக்கு அட்டகாசமான பதிலளித்த விஜய் அன்டனி..! "உங்களுக்கு பிடிக்கலனா கண்ண மூடிக்கோங்க.." 

 
1

சுக்ரன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகினார் விஜய் ஆண்டனி.தொடர்ந்து நான் என்னும் படத்தின் மூலம் கதாநாயகனானார்.

அண்மையில் தன்னுடைய மூத்த மகளை பறி கொடுத்தார். அந்த சோகத்தில் இருந்து மீண்டு வரமுடியாமல் தவிப்பதோடு தான் மீண்டும் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளதாக தெரிவித்திருந்தார்.  அவர் நடிப்பில் ரோமியோ படமும் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், பெண்கள் அறைகுறையாக ஆடை அணிவதாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை விமர்சித்த நடிகர் ரஞ்சித் கூறிய கருத்துக்கு நடிகர் விஜய் ஆண்டனி பதிலளித்துள்ளார்.அதன்படி அவர் கூறுகையில், காசு இருக்கவங்க ஸ்டேஜ் போட்டு கான்சர்ட் நடத்துவாங்க. காசு இல்லாதவங்க இந்த மாதிரி ரோட்டுல நடத்துறாங்க. நம்ம மனசுக்கு புடிச்சது எதுவா இருந்தாலும் இன்னொருத்தர பாதிக்காது| என்றால் அதை தைரியமாக செய்யலாம். ஆடைய அணிவது பெண்களின் சௌகரியம், அதை பற்றி நாம் கருத்து தெரிவிக்க தேவையில்லை. உங்களுக்கு பிடிக்கலனா கண்ண மூடிக்கோங்க என கூறியுள்ளார்.

From Around the web