வடக்கனும் தினமும் போராடி வாழும் இன்னொரு சக ஏழை மனிதன் தான் - விஜய் ஆண்டனி ட்வீட்..!! 

 
1

கடந்த 2016-ம் ஆண்டு விஜய் ஆண்டனி நடித்த திரைப்படம் 'பிச்சைக்காரன்'.இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் முதல் 4 நிமிடம், ஆரம்ப காட்சி ஸ்னீக் பீக் டிரைலரை படக்குழு வெளியிட்டது. அவ்வப்போது சமூக கருத்துக்களை பதிவிட்டு வரும் விஜய் ஆண்டனி தற்போது பதிவிட்டிருக்கும் கருத்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வடக்கனும் கிழக்கனும் தெற்கனும் மேற்கனும்... நம்மைப்போல் தன் குடும்பத்தைக் காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான். யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று தெரிவித்துள்ளார்.

விஜய் ஆண்டனியின் இந்த கருத்து பலரின் எதிர்ப்புகளையும் ஆதரவுகளையும் சந்தித்து வருகிறது.


 

From Around the web