விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’

 
1

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, ‘நான்’, ‘சலீம்’, ‘பிச்சைக்காரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.

சமீபத்தில் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், விஜய்  ஆண்டனி நடிப்பில் வெளியான ‘கோடியில் ஒருவன்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் நடித்துவருகிறார். இப்படம் கடந்த 2014-ம் ஆண்டு என்.வி.நிர்மல் குமார், விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான ‘சலீம்’ படத்தின் அடுத்த பாகமாக தயாராகிவருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு டையூ டாமன் பகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2022-ம் ஆண்டு திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கவுள்ளார். நாயகியாக மேகா ஆகாஷ் ஒப்பந்தமாகியுள்ளர். இவர்களுடன் ரமணா, சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படம் ‘சலீம்’ படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என்று படக்குழு தரப்பில் கூறப்படுகிறது. விஜய் ஆண்டனி பாடல்களுக்கு இசையமைக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசையைக் கவனிக்கிறார். விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

From Around the web