தெலுங்கில் கால்பதிக்கும் விஜய்- தளபதி 66 அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
 

 
வம்சி படிப்பள்ளி, தயாரிப்பாளர் தில் ராஜூ மற்றும் நடிகர் விஜய்

தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படம் தயாராகவுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் டெல்லியில் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்துக்கான பணிகள் நிறையவடவுள்ளன.

அதை தொடர்ந்து விஜய் நடிக்கும் படம் தொடர்பான தகவல் ஏற்கனவே கோலிவுட் சினிமாவில் உலா வந்தன. அதன்படி விஜய்யின் 66-வது படத்தை தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த வம்சி படிப்பள்ளி இயக்குவார் என தகவல்கள் வெளியாகின.

தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி நடிகர் விஜய் நடிக்கும் ‘தளபதி 66’ படத்தை வம்சி இயக்கவுள்ளார், அப்படத்தை தில்ராஜூ தயாரிக்கவுள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வம்சி படிப்பள்ளி ஏற்கனவே தமிழில் கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா நடித்த ‘தோழா’ படத்தை இயக்கியுள்ளார். மேலும் தெலுங்கில் மகேஷ் பாபு கேரியரில் திருப்புமுனையாக அமைந்த ‘மகிரிஷி’ படத்தையும் இவர் தான் இயக்கினார்.

விஜய் - வம்சி படிப்பள்ளி கூட்டணியில் உருவாகும் இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழில் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தெலுங்கிலும் நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web