விஜய் தேவரகொண்டாவின் புதிய காதலி, இந்த விவாகரத்தான நடிகையா?

ராஷ்மிகாவை பிரேக் அப் செய்துவிட்ட நடிகர் விஜய் தேவரகொண்டா, விவாகரத்தான நடிகையுடன் ஒரே அறையில் தங்கும் அளவுக்கு நெருக்கம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
vijay devarakonda

அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்து இந்தியளவில் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. அதை தொடர்ந்து இவர் அடுத்து நடிக்கும் ஒவ்வொரு படமும் தேசியளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றன. அந்த வரிசையில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ படமும் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது.

குறிப்பாக, அந்த படத்தில் நடித்திருந்த விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த படத்துக்கு பிறகு மீண்டும் இவர்கள் இணைந்த நடித்த ‘டியர் காம்ரேட்’ படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும், அந்த படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இடையேயான காதல் காட்சிகள் இளைஞர்களை கிறங்கவைத்தது.

samantha

அதை தொடர்ந்து இருவரும் காதல் உறவில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. அதற்கு இருவருமே பெரியளவில் அலட்டிக் கொள்ளவில்லை. இந்நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் காதல் உறவில் கிடையாது, அவர்கள் பிரேக்-அப் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் விஜய் தேவரகொண்டா தற்போது வேறொரு நடிகையை காதலித்து வருவதாகவும், அவர் ஏற்கனவே திருமணமாகி விவகாரத்தானவர் என்று சொல்லப்படுகிறது. அந்த நடிகை வேறு யாருமில்லை சமந்தா தான். தற்போது சமந்தா உடன் விஜய் தேவரகொண்டா ‘குஷி’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கான படப்பிடிப்பு பணிகள் ஸ்ரீநகரில் நடந்து வருகிறது. அங்கு இருவரும் ஒரே அறையில் தங்கிக்கொண்டு நடித்து வருவதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் ராஷ்மிகா இனி பாலிவுட் படங்களில் நடிக்க அதிக கவனம் செலுத்தவுள்ளதாகவும், அவர் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் இனி நடிக்கமாட்டார் என்றும் கூறப்படுகிறது.
 

From Around the web