அவதூறு பரப்பும் விஜய் தேவரகொண்டா- பிரபல நடிகை தாக்கு..!!

ரசிகர்களை தூண்டிவிட்டு, தன்னை குறித்து சமூகவலைதளங்களில் அவதூறான கருத்துகளை பரப்பும் வேலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா ஈடுபட்டு வருவதாக பிரபல நடிகை அனுசுயா பரத்வாஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டா மிகவும் மோசமான வசனங்களை பேசி நடித்திருப்பார். அப்படிப்பட்ட வசனங்கள் பெண்களுக்கு எதிராக திரும்பிவிடக் கூடாது என்பதற்காக சமூகவைதளத்தில் அர்ஜும் ரெட்டி படத்தை விமர்சித்தும், வஜய் தேவரகொண்டாவை திட்டியும் கருத்து பதிவிட்டேன்.
அப்போது முதல் என்னை குறித்து சமூகவலைதளத்தில் தவறான கருத்துகளை பதிவிடும் வேலையில் விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் ஈடுபடத் துவங்கினர். அது இப்போதும் தொடர்ந்து வருகிறது. அதுமட்டுமின்றி விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமாக இருக்கும் ஒருவரும் என் மீது தரக்குறைவான விமர்சனங்களை முன்வைத்தி வருகிறார்.
இது எல்லாம் விஜய் தேவரகொண்டாவுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை. முடிந்தவரை அவதூறான கருத்துக்கள் பரவாமல் தடுப்பதற்குக் கூட அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அப்படியானால் இதுவெல்லாம் அவரது தூண்டுதலின் பேரில் தான் நடந்துள்ளது. விஜய் தேவரகொண்டாவுக்கு பணம் கொடுத்து என் மீதான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.
ஆந்திராவைச் சேர்ந்த அனுசுயா பரத்வாஜ், தெலுங்கு சினிமாவில் பல முக்கியமான படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் வெளியான புஷ்பா படத்தில் கூட, அவர் நடித்த கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.