விஜய் தேவரகொண்டா- மிருணாள் - பரசுராம் இணையும் படம்: கோலாகலமாக நடந்த பூஜை..!!

அண்மைக் காலமாக விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகும் எந்த படங்களும் பெரியளவில் வெற்றிபெறவில்லை. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘லிகர்’ என்கிற படம் படுதோல்வி அடைந்தது.
இதனால் ஏற்கனவே ஒப்புக்கொண்ட குஷி படத்தில் மட்டும் அவர் நடித்து வந்தார். அந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து விரைவில் ரிலீஸாகவுள்ளது. தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் தேவரகொண்டா புதிய படத்தை ஒப்பந்தம் செய்துள்ளார்.
பரசுராம் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார், ’சீதா ராமம்’ புகழ் மிருணாள் தாகூர் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கோபி சுந்தர் என்பவர் இசையமைக்கும் இப்படத்தை தில்ராஜூ பெரும் பட்ஜட்டில் உருவாகவுள்ளார்.
ஏற்கனவே பரசும்ராம் - விஜய் தேவரகொண்டா - கோபி சுந்தர் கூட்டணியில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ படம் மாபெரும் வெற்றி அடைந்தது. தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
இப்புதிய படத்துக்கான பூஜை இன்று ஹைதராபாத்தில் கோலாகலமாக நடந்தது. கீதா கோவிந்தம் போலவே இப்படமும் காதல் கதையாக தயாராகவுள்ளது. விரைவில் படத்துக்கான படப்பிடிப்பு துவங்கப்பட்டு, ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்.