விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்துக்கு இன்று பூஜை- ஹீரோயின் இவரா..??

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்துக்கு இன்று பூஜை போடப்படுகிறது. இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு பிரபல நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
vijay devarakonda

சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் 2017-ம் ஆண்டு வெளியான படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இதன்மூலம் இந்தியளவில் பிரபலமான நடிகராக மாறினார் விஜய் தேவரகொண்டா. அவர் நடிக்கும் ஒவ்வொரு படமும் இந்தியளவில் ரசிகர்களிடையே பிரபலமானது.

எனினும் சமீப காலமாக இவர் நடிக்கும் படங்கள் எதுவும் வெற்றி அடையவில்லை. குறிப்பாக, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான லிகர் படம் பாக்ஸ் ஆஃப்ஸில் படுதோல்வி அடைந்தது. இதனால் அவர் தனது அடுத்த படத்தை அறிவிப்பதில் சற்று பொறுமையாக இருந்தார்.

parasuram

கடந்த 2018-ம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் கீதா கோவிந்தம். இப்படத்தை இயக்கிய பரசுராம் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். இதற்கான பூஜை இன்று கோலாகலமாக நடைபெறவுள்ளது. 

mrunal takur

மேலும் இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு ‘சீதா ராமம்’ புகழ் மிருணாள் தாகூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தாண்டு இறுதிக்குள் படப்பிடிப்பு பணிகள் முடிக்கப்பட்டு, அடுத்தாண்டு தொடக்கத்தில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

From Around the web