இணையத்தில் வைரலாகும் விஜய் தேவர்கொண்டாவின் "பேமிலி ஸ்டார்" படத்தின் டீஸர்..! 

 
1

கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா நடிப்பில் ‘கீதா கோவிந்தம்’ என்னும் திரைப்படம் வெளியாகி மெகா ஹிட் ஆனது. இந்த படத்தை இயக்குனர் பரசுராம் பெட்லா இயக்கியிருந்தார். இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. படத்திற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. தொடர்ந்து படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இப்படத்திற்கு "பேமிலி ஸ்டார்" என்று தலைப்பு வைக்கப்பட்டது. இதில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக மிர்ணாள் தாகூர் நடித்துள்ளார். மிருணாள் தாக்குர், திவ்யன்ஷா கவுசிக், அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.இவர் சீதா ராமம் படத்தில் நடித்து தென்னிந்தியாவில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தவர் ஆவார்.

இந்த புதிய படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஏப்ரல் மாதம் 5-ம் தேதி வெளியாகும் என படக்குழு அண்மையில் அறிவித்தது. இந்நிலையில், படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

From Around the web