விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..! மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகும் போக்கிரி, துப்பாக்கி படங்கள்..!   

 
1

விஜய் நடிப்பில் ஹிட் அடித்த கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. தரணி இயக்கியிருந்த இத்திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்ட போதிலும், படம் வசூலை குவித்தது. இதைத் தொடர்ந்து அஜித் பிறந்தநாள் போது, பில்லா, மங்காத்தா ஆகிய படங்களும் மறுவெளியீடு செய்யப்பட்டன. தற்போது விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில் ஹிட் அடித்த துப்பாக்கி மற்றும் போக்கி ஆகிய திரைப்படங்கள் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகின்றன.

விஜய் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் துப்பாக்கி. இத்திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இப்படம் ஏகபோக வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். இத்திரைப்படம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஜூன் 21-ம் தேதி திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது.

அதேபோல, விஜய் நடித்த போக்கிரி திரைப்படமும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆகிறது. இத்திரைப்படத்தை பிரபல நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவா இயக்கி இருந்தார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக அசின் மற்றும் வடிவேலு, பிரகாஷ் ராஜ், நாசர், நெப்போலியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படமும் ஜூன் 21-ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

From Around the web