மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த விஜய் ரசிகர்கள்!!

 
1

இயக்குனர் மிஸ்கின் மாவீரன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக லியோ திரைப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் மிஸ்கின் நடித்துள்ளார்….படத்தில் இவரும் ஒரு வில்லனாம்.இவர் வில்லனாக நடித்த மாவீரன் படம் வெளிவந்தது.இவரின் நடிப்பை பார்த்து பலரும் மிரண்டு உள்ளனர்..அப்படி தனக்கென தனி இடத்தை இவர் பிடித்து உள்ளார் என்றே சொல்லலாம்..

இந்நிலையில், லியோ படம் குறித்தும் லியோ படத்தை விஜய் பார்த்து விட்டதாகவும் பத்திரிகையாளர்களிடம் கூறினார். அந்த பேட்டியில் மிஸ்கின் விஜய்யை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  தளபதி ரசிகர்கள் சார்பாக மிஸ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது, அந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதில், ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா.! எங்கள் தளபதியை ஒருமையில் பேசிய அடி முட்டாளே.! மனநலம் குன்றியவனே.! அறிவுகெட்டவனே.! மன்னிப்பு கேள்..! எச்சரிக்கையுடன்..! தளபதி வெறியர்கள்’ என தெரிவித்துள்ளனர். விஜய் ரசிகர்களின் இந்த போஸ்டரால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

From Around the web