எளிமையாக நடந்த முடிந்த விஜய் பட ஒளிப்பதிவாளர் திருமணம்..!
 

 
எளிமையாக நடந்த முடிந்த விஜய் பட ஒளிப்பதிவாளர் திருமணம்..!

விஜய் நடிப்பில் வெளியான மெர்சல், பிகில் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஜி.கே. விஷ்ணுவின் திருமணம் மிகவும் எளிமையான முறையில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் இரண்டாவது முறையாக நடித்ஹ்ட படம் மெர்சல். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக படத்தின் ஒளிப்பதிவுக்கு கூடுதலான சிறப்பு அமைந்தது. அந்த படத்தை ஒளிப்பதிவு செய்ததன் மூலம் ஜி.கே. விஷ்ணு தமிழ் சினிமாவில் கவனமீர்த்தார்.

அதை தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணியில் உருவான ‘பிகில்’ படத்தில் பணியாற்றவும் அவர் வாய்ப்பு பெற்றார். அந்த படத்தில் விஷுவல் எஃப்கெட்ஸுடன் சேர்ந்து ஒளிப்பதிவு பணிகளுக்கு பாராட்டுக்கள் கிடைத்தன. இதனால் அட்லி - விஜய் - ஜி.கே. விஷ்ண் ஒரு ஹிட் காம்போவாக தமிழ் சினிமாவில் அறியப்படுகிறது.

தற்போது ஒளிப்பதிவாளர் ஜி.கே. விஷ்ணு மற்றும் மகாலட்சுமி என்பவருக்கும் நேற்று கோலாகலமாக மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. சென்னை சோழிங்க நல்லூரிலுள்ள இஸ்கான் கோயிலில் இந்த திருமணம் நடைபெற்றது.

கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருப்பதால் மணமக்களுக்கு மிகவும் நெருக்கமான சுற்றத்தார், நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். திரைத்துறையினரைச் சேர்ந்த யாரும் ஜி.கே. விஷ்ணுவில் திருமண வைபவத்தில் பங்கேற்கவில்லை என்று சொல்லப்படுகிறது. 

From Around the web