மாணவர்களை சந்திக்க தயாராகும் விஜய் !
May 29, 2024, 08:35 IST
தமிழக வெற்றிக்களகம் என்ற பெயரில் கட்சி ஒன்றையும் ஆரம்பித்துள்ளார் தளபதி விஜய். இவர் சமீபத்தில் இன்னும் இரண்டு படங்கள் மாத்திரம் நடித்துவிட்டு சினிமாவை விட்டு விளகப்போவதாகவும் கூறியிருந்தார்.
கட்சியில் உறுப்பினர்களை சேர்ப்பதற்காக ஆப் ஒன்றையும் உருவாக்கி உறுப்பினர்களையும் சேர்த்து வருகின்றார். இது மட்டுமின்றி மாணவர்களுக்கும் உதவி செய்கின்றார்.
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை ஜூன் மாதம் 2ம் வாரத்தில் நடிகர் விஜய் சந்திக்க இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. விஜய் அரசியலில் இறங்கிய பின்பு கூட்டப்போகும் கூட்டம் என்பதால் இதற்கு எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.
 - cini express.jpg)