இன்ஸ்டாவின் விஜய் நுழைந்தவுடன் அவரை ஃபாலோ செய்த முதல் நபர் இவர்தான்..!!

நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கியவுடன், அவரை முதன்முதலாக ஃபாலோ செய்த பிரபலம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 
vijay

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான விஜய், ஏற்கனவே ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் உள்ளார். இந்த வரிசையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, அவர் இன்ஸ்டாகிராமில் புதியதாக கணக்கு துவங்கினார். அவர் புதியதாக கணக்கு துவங்கிய சில மணிநேரங்களில் மில்லியன் கணக்கில் ஃபோலோயர்ஸுகள் குவிந்தனர்.

இதன்மூலம் இன்ஸ்டாகிராமில் வந்த வெகு சில மணிநேரங்களில் மில்லியன் கணக்கில் ஃபோலோயர்ஸுகளை கைப்பற்றிய நடிகர் என்கிற சாதனையையும் விஜய் படித்தார். இந்நிலையில் நடிகர் விஜய் கணக்கு துவங்கியதும் அவரை முதன்முதலில் ஃபாலோ செய்த பிரபலம் யார் என்பது குறித்து தகவல் தெரியவந்துள்ளது.

keerthy suresh

அதன்படி விஜய் இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கியதும், அவரை ஃபாலோ செய்த முதல் நபர் என்கிற பெருமை நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்துள்ளது. மேலும், அவரை ஃபாலோ செய்த முதல் பிரபலமும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் புதியதாக கணக்கு துவங்கினார். இதனையடுத்து அவர் இப்போது நடித்து வரும் லியோ பட புகைப்படங்களை அவர் பதிவிட்டு இருந்தார். இதற்கு லைக்ஸ், ஃபாலோயர்கள் குவிந்தனர்.

தமிழ் திரையுலக பிரபலங்கள் பெரும்பாலானோர் அவரது பக்கத்தை ஃபாலோ செய்வதாக அறிவித்தனர். அவர்கள் முதல் ஆளாக கீர்த்தி சுரேஷ் நடிகர் விஜய்யை ஃபோலோ செய்துள்ளார். நடிகர் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் ‘சர்கார்’, ‘பைரவா’ உள்ளிட்ட படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

From Around the web