கமலின் விக்ரம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்யும் விஜய் பட ஒளிப்பதிவாளர்..!

 
லோகேஷ் கனகராஜுடன் ஒளிப்பதிவாளர் கிரீஷ் கங்காதரன்

விஜய் நடித்த சர்கார் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் கமல்ஹாசன் - லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக விக்ரம் படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்வதாக முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் தேதி பிரச்னை காரணமாக படத்தில் அவர் பணியாற்ற முடியாமல் போனது. தற்போது அவருக்கு மாற்றாக கிரீஷ் கங்காதரன் விக்ரம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

விக்ரம் இவர் ஒளிப்பதிவு செய்யும்  மூன்றாவது படமாகும். முன்னதாக சோலோ, சர்கார் ஆகிய படங்களில் தமிழில் ஒளிப்பதிவு செய்துள்ளார். மலையாளத்தில் அங்கமாளி டைரீஸ், ஜல்லிக்கட்டு போன்ற தேசியளவில் கவனமீர்த்த படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

விக்ரம் படத்துக்கு இவர் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதிவிட்டுள்ளார். மேலும் விக்ரம் படத்திற்கு கிரீஷ் கங்காதரனை வரவேற்பதாக நடிகர் கமல்ஹாசனும் ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

From Around the web