தளபதி விஜய் 66 அப்டேட் !!

 
விஜய்

நடிகர் விஜய்யின் 66-வது படத்தை தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கவுள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாக்டர் படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் இதற்கான பணிகள் மீண்டும் துவங்கவுள்ளன. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்து நடிக்கும் படம் குறித்த எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்களிடம் எழுந்து வருகிறது. அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநரான வம்சி பைடிபள்ளி தெலுங்கு ஊடகத்திற்கு சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அதில் விஜய் நடிக்கும் 66-வது படம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. 

முன்னதாக இயக்குநர் வம்சி, மகேஷ் பாபு மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான ‘மகிரிஷி’ படத்தை இயக்கிருந்தார். மேலும் தளபதி 66 படம் தெலுங்கில் வெளிவரவுள்ளது. அதனால் இதன்மூலம் நடிகர் விஜய் தெலுங்கு சினிமாவில் கால்பதிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 
 

From Around the web