தளபதி விஜய் படைத்த சாதனை..!!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக நுழைந்ததை அடுத்து, வெகு சில மணிநேரங்களில் ஆயிரக்கணக்கான ஃபோலோயர்ஸுகளை அவர் அறுவடை செய்தார்.
 
vijay

நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், ப்ரியா ஆனந்த், கௌதம் வாசு தேவ் மேனன், அர்ஜூன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அண்மையில் இப்படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பு நிறைவடைந்தது. விரைவில் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், எங்கு திரும்பினாலும் நடிகர் விஜய், அவர் நடிக்கும் படங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் தொடர்பான போஸ்டர் வைரலாகியுள்ளது. அதற்கு காரணம், அவருடைய இன்ஸ்டாகிராம் பிரவேசமாகும். 

ஏற்கனவே ட்விட்டரில் அவர் இருந்தாலும், சமூகவலைதளங்களில் அவர் பெரியளவில் ஆக்டிவாக இருக்கமாட்டார். ஆனால் இனி வரும் காலம் அப்படியிருக்க முடியாதே. திரைப்படங்களுக்கும் கலைப்படைப்புகளுக்கும் நிச்சயம் ப்ரோமோஷன் தேவைப்படுகிறது.

அதுவும் நடிகர் விஜய் நடிக்கும் படங்களின் வியாபாரம் பெரியளவில் இருக்கும். அதற்கு அவர் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. அதன்காரணமாகவே ட்விட்டரை தொடர்ந்து, அவர் இன்ஸ்டாவுக்கு வந்துள்ளார்.

விஜய் அக்கவுண்ட் தொடங்கி வெகு சில மணிநேரங்கள் மட்டுமே இருக்கும். அதற்குள் அவருக்கான ஃபோலோயர்ஸுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்தது. தற்போதைய நேரத்தில் அவருக்கு 4 மில்லியன் போலோயர்ஸுகள் உள்ளனர்.

இதன்மூலம் இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கிய சில மணி நேரங்களில் மில்லியன் கணக்கில் ஃபோலோயர்ஸ் கொண்ட சினிமா பிரபலம் என்கிற சாதனையை விஜய் படைத்துள்ளார். அவருக்கான ஃபோலோயர்ஸுகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அக்கவுண்டை தொடங்கியதும் அவரது புகைப்படத்தை பதிவிட்டு,‘‘ஹாய் நண்பா, நண்பிஸ்” என பதிவிட்டிருந்தார். அவரது இந்தப் புகைப்படம் 24 மணி நேரத்தில் 4 மில்லியன் லைக்குகளைப் பெற்றது. மேலும், 99 நிமிடத்தில் நடிகர் விஜய் 1 மில்லியன் ஃபாலோயர்களை பெற்றுள்ளார். இதன்மூலம் உலக அளவில் இன்ஸ்டாகிராமில் அதிகவேகமாக 1 மில்லியன் ஃபாலோயர்களை பெற்றவர்கள் பட்டியலில் நடிகர் விஜய் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

உலக அளவில் அதிகவேகமாக 1 மில்லியன் ஃபாலோயர்களைப்பெற்றவர் பட்டியலில் கொரியன் இசைக்குழுவான பிடிஎஸ் குழுவைச் சேர்ந்த வி எனப்படும் கிம் டேஹ்யுங் 43 நிமிடத்தில் 1 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்று முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக 59 நிமிடத்தில் 1 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை பெற்று ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி இரண்டாவது இடத்தில் உள்ளார். விஜய் 99 நிமிடத்தில் 1 மில்லியன் ஃபாலோயர்கள் என்ற கணக்கில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். தற்போது வரை விஜய்க்கு இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 4.6 மில்லியன் (46 லட்சம்) என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நடிகர் அஜித் குமாரின் மனைவி ஷாலினி, புதியதாக இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கினார். அவரை 2.74 லட்சம் பேர் ஃபோலோ செய்கின்றனர். தனது குடும்பம் மற்றும் நண்பர்களின் புகைப்படங்களை ஷாலினி அதில் ஷேர் செய்து வருகிறார்.
 

From Around the web