உள்ளாட்சி தேர்தலில் 77 இடங்களை கைப்பற்றிய விஜய் மக்கள் இயக்கம்..!
 

 
விஜய்

விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் சுயேட்ச்சைகளாக போட்டியிட்டு 77 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு கடந்த 6 மற்றும் 9-ம் தேதிகள் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டன. மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்காக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் இந்த தேர்தல் நடைபெற்றது. 

ஆளும் கட்சி திமுக கூட்டணி கட்சிகள், எதிர் கட்சி அதிமுக கூட்டணி கட்சிகள் பிரதான இடங்களில் போட்டியிட்டன. மேலும் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழ், பாட்டாளி மக்கள் கட்சி, பாஜக ஆகிய் பிரதான கட்சிகளும் தேர்தலில் களம் கண்டன. இவற்றுடன் சுயேட்ச்சை வேட்பாளர்களும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டனர். இதற்காக பதிவான வாக்குகளை எண்ணும் பணி 74 மையங்களில் நடந்தன.

அதன்படி ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட சுயேட்ச்சைக்களில் 169 விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் 77 பேர் வெற்றி பெற்றுள்ளதாக விஜய் மக்கள் இயக்கத்தின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தகவல் வெளியிட்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் சினிமா துறையிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடைபெற்று முடிந்துள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் காஞ்சிபுரம் மாவட்டம் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த பிரபு என்பவர், ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web