12 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் விஜய் - பிரகாஷ் ராஜ் வெற்றிக்கூட்டணி..!

 
பிரகாஷ் ராஜ்

வில்லு படத்துக்கு பிறகு 12 ஆண்டுகள் கழித்து விஜய் மற்றும் பிரகாஷ் ராஜ் புதிய படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர். இதுதொடர்பான தகவல்களை பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் வெற்றிக்கூட்டணியாக வலம் வருபவர்களில் விஜய் மற்றும் பிரகாஷ் ராஜ் கூட்டணிக்கு தனி இடம் உண்டு. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த கில்லி, போக்கிரி, சிவகாசி போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைந்தன.

எனினும் இவ்விரு நடிகர்களும் இணைந்து நடித்த ஆதி, வில்லு ஆகிய படங்கள் படுதோல்வி அடைந்த கதைகளும் உண்டு. இருந்தாலும் இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பதாக செய்தி வெளியானலே அது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறும்.

அந்த வகையில் பீஸ்ட் படத்துக்கு பிறகு தெலுங்கு இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் விஜய். இந்த படத்தில் நடிப்பதை சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் நடிகர் பிரகாஷ் ராஜ் உறுதி செய்துள்ளார்.

அதன்படி ஜினியுடன் நடித்து வருகிறேன், சூர்யாவுடன் நடித்து வருகிறேன், விஜய்யுடன் நடிக்கவுள்ளேன்’ என்று அவர் நேர்காணலில் தெரிவித்தார். இதன்மூலம் தளபதி 66 படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

விஜய் மற்றும் பிரகாஷ் ராஜ் இருவரும் இணைந்து நடித்த ‘வில்லு’ படம் 2009-ம் ஆண்டு வெளியானது. அதன்பின் 12 ஆண்டுகள் கழித்து தற்போது இருவரும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே கவனமீர்த்துள்ளது.

From Around the web