எல்.சி.யு-க்குள் வந்த ’லியோ’- உறுதி செய்த நடிகர்..!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்தின் கதை எல்.சி.யு-க்குள் தான் வருகிறது என்பதை ‘விக்ரம்’ பட நடிகரின் சமூகவலைதளப் பதிவு உறுதி செய்துள்ளது. 
 
jaffer sadhiq

லியோ படம் துவங்கியதில் இருந்து, அப்படம் லோகேஷ் கனகராஜின் ‘லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ்’ கதைக்குள் வருகிறதா? இல்லையா? என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கு லோகேஷ் கனகராஜ் உட்பட படக்குழுவினர் யாரும் முறையான பதில் கூறவில்லை.

அந்த நேரத்தில் லியோ படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடந்து வந்தது. அதில் நடிகர் நரேன் கலந்துகொண்டார். ஷூட்டிங்கில் பங்கெடுத்த புகைப்படங்களை அவரே தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முன்னதாக வெளியான கைதி, விக்ரம் போன்ற படங்களில் நரேன் நடித்திருந்தார்.

இவ்விரண்டு படங்களுமே லோகேஷின் எல்.சி.யு-க்குள் வருகிறது. ஏற்கனவே லியோ படமும் எல்.சி.யு-க்குள் வருகிறதா? இல்லையா? என்று பலரும் கேள்வி கேட்டு வந்த நிலையில், நரேனின் வருகை லியோ படமும் எல்.சி.யு-க்குள் வருவதை உறுதி செய்தது. 

இந்நிலையில் லியோ படத்தில் ஜாபர் சாதிக் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே விக்ரம் படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். இதன்மூலம் லியோ படம் எல்.சி.யு கதைக்களத்தில் வருவது மீண்டும் உறுதியாகியுள்ளது. இது படத்தை எதிர்பார்த்து வரும் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லியோ படத்தில் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவருடன் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை நடிகர் விஜய்யின் மாமன்வான ஜான் ப்ரிட்டோ தயாரித்து வருகிறார்.


 

From Around the web