மாரி செல்வராஜை கட்டியணைத்த போது விஜய் சேதுபதி மாஸ்க் அணியவில்லை- வெடித்தது புதிய சர்ச்சை..!
கர்ணன் படம் பார்த்துவிட்டு இயக்குநர் மாரி செல்வராஜை கட்டியணைத்து பாராட்டிய போது நடிகர் விஜய் சேதுபதி மாஸ்க் அணியாமல் இருந்தது தொடர்பாக புகார் எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நோய் தொற்று அபாயம் ஏற்படுவதை தடுக்க மீண்டும் தமிழக அரசு பொதுமக்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. முகக்கவசம் அணிவது, தனி நபர் இடைவெளியை பின்பற்றுவது, பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்ப்பது, திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம் வெளியான கர்ணன் படத்திற்கு ரசிகர்களிடையே வரவேற்பு குவிந்து வருகிறது. இந்நிலையில் சென்னையிலுள்ள பிரபல திரையரங்கில் திரையுலக பிரபலங்களுக்காக கர்ணன் படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. அந்த நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதியும் கலந்துகொண்டு படம் பார்த்தார்.
படம் முடித்துவிட்டு வெளியே வந்த அவர், இயக்குநர் மாரி செல்வராஜை கட்டியணைத்து படம் நன்றாக உள்ளது என்று முத்தமிட்டு பாராட்டினார். அப்போது நடிகர் விஜய் சேதுபதி முகக்கவசம் அணிந்திருக்கவில்லை. இந்த சந்திப்பு தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.
அப்போது நடிகர் விஜய்சேதுபதி முகக்கவசம் அணியாமல் இருப்பது கண்டனங்கள் எழுந்தன. விஜய்சேதுபதி முககவசம் அணியாமல், சமூக விலகலை கடைபிடிக்காமல் மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து முத்தமிட்டு கொரோனா விதிமுறைகளை மீறி இருக்கிறார். விஜய்சேதுபதியே இப்படி செய்யலாமா? உங்களை பார்த்து ரசிகர்களும் இப்படித்தானே செய்வார்கள் என்று நெட்டிசன்கள் புகார்களை அடுக்கியுள்ளனர்.
 - cini express.jpg)