தமிழுக்கு விஜய் சேதுபதி; தெலுங்குக்கு தமன்னா- மாஸ்டர் செஃப் சீக்ரெட்ஸ்..!

 
விஜய் சேதுபதி மற்றும் தமன்னா

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை தமன்னா இருவரும் பணியாற்றவுள்ள ரியாலிட்டி நிகழ்ச்சிக்காக நடத்தப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

சர்வதேசளவில் பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சி ‘மாஸ்டர் செஃப்’. ஏற்கனவே இந்நிகழ்ச்சி வட இந்திய சேனல்களில் ஒளிப்பரப்பாகி மிகப்பெரிய ஹிட்டடித்துவிட்டன.

தற்போது இந்நிகழ்ச்சி தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் தயாரிக்கப்படுகிறது. முதற்கட்டமாக தெலுங்கு மற்றும் தமிழில் ஒளிப்பரப்பாகவுள்ளது.

தமிழில் இந்நிகழ்ச்சியை விஜய் சேதுபதியும், தெலுங்கில் நடிகை தமன்னாவும் தொகுத்து வழங்கவுள்ளனர். இதற்கான போட்டோஷூட் சமீபத்தில் நடத்தப்பட்டது. அப்போது இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன.

மாஸ்டர் செஃப் தமிழ் மற்றும் மாஸ்டர் செஃப் தெலுங்கு ஆகிய நிகழ்ச்சிக்கான முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. விரைவில் இதனுடைய ஒளிப்பரப்பு குறித்த விபரங்கள் வெளியாகும். தமிழக ரசிகர்களிடம் இந்நிகழ்ச்சிக்கு தனி கவனம் கிடைத்துள்ளது.
 

From Around the web