ஷங்கர் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி..?

 
ஷங்கர் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி..?

தெலுங்கில் ராம் சரணை வைத்து ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் துவங்கப்பட்ட இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் மீண்டும் துவங்கப்படாமல் உள்ளது. இதனால் தெலுங்கில் ராம் சரணை வைத்து படம் இயக்கப்போவதாக அறிவித்தார் ஷங்கர்.

அந்த படத்தை தில்ராஜூ தயாரிக்கும் நிலையில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்தியில் ரன்வீர் சிங் நடிப்பில் ‘அந்நியன்’ படத்தை ரீமேக் செய்யப்போவதாகவும் ஷங்கர் அறிவித்துள்ளார்.

இந்த இரண்டு படங்களை எதை முதலில் அவர் தொடங்குகிறார் என்பது தெரியவில்லை. ஆனால் முதற்கட்டமாக ராம்சரண் படத்தை முடிக்கும் திட்டத்தில் ஷங்கர் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளும் துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி ஏற்கனவே ராம்சரணின் தந்தையும் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான சிரஞ்சீவி ஷங்கர் இயக்கும் படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல பாலிவுட் நடிகர் சல்மானையும் படத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன.

இதற்கிடையில் படக்க்குழுவினர் விஜய் சேதுபதியிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஷங்கர் இயக்கும் இந்த படம் அனைத்து மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளன. அதற்கேற்றவாறு அந்தந்த மொழிகளிலுள்ள முக்கிய நடிகர்களை நடிக்கவைக்கும் முயற்சியில் படக்குழு இறங்கியுள்ளது. 
 

From Around the web