லியோ படத்தில் இணைந்த விஜய் சேதுபதி?

லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ‘லியோ’ படத்தில் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் விக்ரம் படத்தில் சந்தனம் கதாபாத்திரம் உயிரிழந்ததா? இல்லையா? என்கிற குழப்பம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
 
vijay

தமிழ் சினிமா ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் படம் ‘லியோ’. விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், ப்ரியா ஆனந்த், நரேன், கவுதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 

இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் ஒரு மாத காலமாக நடைபெற்று முடிந்துள்ளது. விரைவில் சென்னையிலும், அதை தொடர்ந்து ஹைதராபாத்திலும் படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளது. லியோ படத்தில் புதியதாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் லியோ படத்தில், அவர் சந்தனம் கதாபாத்திரமாகவே தோன்றவுள்ளதாக கூறப்படுகிறது.

விக்ரம் படத்தில் சந்தனம் இறந்துவிட்டதால், எப்படி லியோ படத்தில் விஜய் சேதுபதி நடிப்பார்? என்கிற கேள்வி பலருக்கும் எழலாம். அதன்படி லியோ படத்தில் விஜய் சேதுபதியின் குரல் மட்டுமே இடம்பெறுகிறவுள்ளதாக தெரிகிறது. அதற்கான டப்பிங் பணிகள் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

லியோ படத்தில் விஜய் சேதுபதி குரல் மட்டும் வரும். அதை வைத்து அந்த படத்தின் கதை நகரும் என்று தெரியவந்துள்ளது. விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் முந்தைய காலத்தை மையப்படுத்தி லியோ கதை உருவாக்கப்பட்டுள்ளது என தகவல்கள் கூறுகின்றன. நிச்சயம் அது ரசிகர்களுக்கு சர்ப்பரைஸாக இருக்கும் என கூறப்படுகிறது.
 

From Around the web